NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

முடி உதிர்வா? கவலை வேண்டாம்!

சில எளிய வழிகளைப் பின்பற்றினால், முடி உதிர்வில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். அதற்கான சில வழிகளை இங்கே சொல்கிறோம்.   

முடி உதிர்வா? கவலை வேண்டாம்!

தலை முடியைப் பாதுகாக்காத பெண்களே இருக்க முடியாது. அடர்ந்த நீளமான கூந்தலுக்கு ஆசைப்படாதவர்களே இல்லை. ஆனால் நம்முடைய அடர் கூந்தல் உதிர்ந்துக் கொண்டே போனால், ஒரு கட்டத்தில் அதுவே நம்மை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடும். ஆனால் சில எளிய வழிகளைப் பின்பற்றினால், முடி உதிர்வில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். அதற்கான சில வழிகளை இங்கே சொல்கிறோம்.   

தேவையான அளவு புரதம் சாப்பிடுங்கள்

நம் உடலுக்குத் தேவையான சத்துக்களில் புரதத்திற்கு தான் முதலிடம். எலும்புகள், தசைகள், தோல் மற்றும் முடியின் வளர்ச்சிக்கு புரதம் பெரிதும் உதவுகிறது. திசுக்களின் பராமரிப்பிற்கும், தசைகளை உறுதியாக்குவதற்கும் புரதம் பயன்படுகிறது. உடலுக்குத் தேவையான புரதம் கிடைக்காத போது, அது முடி வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும். முடி உதிர்வைத் தடுத்து, வளர்ச்சியை தூண்ட உணவில் நிறைய புரதச்சத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் மற்றும் பால் பொருட்கள், கோழி, மீன், முட்டை, இறைச்சி, நட்ஸ் ஆகியவற்றில் புரதம் நிறைந்துள்ளது. இவை அனைத்தையும் தினமும் உணவில் சேர்த்து கொள்ள முடியாது ஆதலால், தினசரி உணவில் ஒவ்வொன்றாக தவறாமல் சேர்த்துக் கொண்டாலே போதும், உடலுக்குத் தேவையான புரதம் கிடைத்து முடி கொட்டுவது நின்றுவிடும்.  

மசாஜ் செய்வது அவசியம்

நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றைக் கொண்டு, வாரத்திற்கு ஒரு முறையாவது மசாஜ் செய்ய வேண்டும். இரவு படுக்கும் முன் எதேனும் ஒரு எண்ணெயைக் கொண்டு, மயிர்கால்களில் படும்படி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் முடி வளர்ச்சியைத் தூண்டி அடர்த்தியாக வளரச் செய்வதோடு மயிர்கால்களையும் உறுதியாக்கும்.  

சூடான நீர் தலைமுடிக்கு கெடுதல்

வெந்நீரில் குளிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம். ஆனால் வெந்நீர் கொண்டு தலைமுடியை அலசினால் கூந்தலை வரண்டு போக செய்யும். தவிர மயிர்க்கால்களை வலுவிழக்க செய்து முடி உதிர்வை உண்டாக்கும்.  அதனால் தலைக்கு குளிக்கும் போது எப்போதும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். குளிர்ந்த நீர் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.  

இவையனைத்தையும் பின்பற்றி வந்தால், முடி உதிர்வைத் தடுக்கலாம். 

Comments

இவையனைத்தையும் பின்பற்றி வந்தால், முடி உதிர்வைத் தடுக்கலாம்.

அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT