NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArtWeddings
ADVERTISEMENT

சென்னையில் கிராமத்து சந்தை!

என்ன தான் நவீன நகரத்தில் வசித்தாலும் கிராமத்தில் இருக்கும் பல சின்ன சின்ன மகிழ்ச்சியான விஷயங்கள் இங்கு மிஸ்ஸிங் தான்

சென்னையில் கிராமத்து சந்தை!

என்ன தான் நவீன நகரத்தில் வசித்தாலும் கிராமத்தில் இருக்கும் பல சின்ன சின்ன மகிழ்ச்சியான விஷயங்கள் இங்கு மிஸ்ஸிங் தான். அப்படியான ஒன்று தான் சந்தை. ஆனால் தற்போது அதற்கு ஒரு வழி பிறந்திருக்கிறது. மரபுவழி வாழ்க்கை முறைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் ‘களம்’ குழுவினர் சென்னையில் சந்தைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 
வரும் 15 ஆம் தேதி, சென்னை சாந்தோமில் உள்ள சி.எஸ்.ஐ காது கேளாதோர் பள்ளியில் இது நடைப்பெறுகிறது. இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகை பொருட்கள், சிற்றுண்டி வகைகள், காய்கறி, பழங்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள், பருத்தி, சணல் பொருட்கள், வேளாண் பொருட்கள், புத்தகங்கள், மூலிகை, மருத்துவ பொருட்கள் ஆகியவை இந்தச் சந்தையில் கிடைக்கும். விற்பனை மட்டுமின்றி நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும், கலந்துரையாடல்களும் நடைப்பெற உள்ளன. பறை, சிலம்பம் உள்ளிட்ட கிராமிய கலை வகுப்புகள், மண்பானை பயிற்சி போன்ற வகுப்புகளும் இதில் அடங்கும். 
சந்தையில் கிடைக்கும் பொருட்கள்

1. வீட்டு உபயோகப் பொருட்கள்:

மண் பாணை, பனைஓலை, பித்தளை பொருட்கள், மரப்பொருட்கள்
Comments2. மளிகை பொருட்கள்

பாரம்பரிய அரிசி வகைகள், பருப்பு, சிறுதானியங்கள், அஞ்சறைப் பெட்டி பொருட்கள், நாட்டுப்பசு நெய், மரச்செக்கு எண்ணெய்

3. சிற்றுண்டி வகைகள்

சிறுதானிய பழ கேக், ஐஸ்க்ரீம், பிஸ்கட், உருண்டைகள், திணை பாயாசம், நன்னாரி சர்பத், கூழ், போளி

4. மதிப்புக்கூட்டு பொருட்கள்

பலதானிய சத்துமாவு, முறுக்கு சம்பா கோதுமை மாவு, புட்டு மாவு, மூங்கில் அரிசி, ஊறுகாய் வகைகள் மற்றும் பல

5. வேளாண் பொருட்கள்

நோய்களை குணப்படுத்தும் மூலிகை செடிகள்,  நாட்டு காய்கறி மற்றும் கீரை விதைகள், சிறுதானிய சமையல் குறிப்புகள், வேளாண் புத்தகங்கள்

6. பருத்தி, சணல் பொருட்கள்

வேட்டி, சட்டை, பெட்ஷீட், பருத்தி, சணல் பைகள், ஆண்களுக்கான உள்ளாடை

7. மூலிகை, மருத்துவ பொருட்கள்

மூலிகை டீ தூள், தைலம், ஹீலிங் சிகிச்சைக்கான பொருட்கள்

8. சந்தை நடைப்பெறும் நாள் ஜுலை 15

இடம் : சென்னை சாந்தோம் சி.எஸ்.ஐ காது கேளாதோர் பள்ளி
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
அனுமதி இலவசம்!




அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT