NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthAppsArt
ADVERTISEMENT

சென்னையில் கிராமத்து திருவிழா வில்லேஜ் டிக்கெட் 2.0

வில்லேஜ் டிக்கெட் 2.0 குடும்பத்துடன் கொண்டாட்டமாக இருக்கும் இடம் என்பதில் சந்தேகமேயில்லை

நமக்கு உணவினை வழங்கும் அங்கீகாரம் ஏதுமில்லாத, அதிகம் பேசப்படாத, விவசாயிகளை அவர்களின் வாழ்வை நேரடியாக அனுபவிக்கவும், நம்முடைய வாழ்வியல் சூழலுக்கு ஏற்ற உண்மையான பாரம்பரியமான உணவுகளை சாப்பிடவும், கிராமத்து விளையாட்டுக்களை விளையாடி, பொழுது போக்கவும் கிராமப்புற கலைஞர்களின் நிகழ்ச்சிகளை நேரடியாக பார்த்து கொண்டாடவும் உங்களுக்கு வழி செய்து கொடுக்கிறது. வில்லேஜ் டிக்கெட் 2.0

p86gi78

பிராண்ட் அவதார் மற்றும் கிராண்ட் கேட்டரிங் நிறுவனம் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள வில்லேஜ் டிக்கெட் 2.0, சத்யபாமா இன்ஸ்டிட்யூட்டில், ஜனவரி 3 முதல் 6 வரை பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 32 சமையல் கலைஞர்களின் திறமையில் சைவப் பிரியர்களுக்கு கல்யாண விருந்தும் அசைவ பிரியர்களுக்கு மாப்பிள்ளை விருந்தும் மதிய உணவாக கிராமத்து விருந்தும் இங்கு பரிமாறப்படுகிறது.

l4brkjhg

இந்த திருவிழாவில் அரிசி, சிறுதானியங்கள், கோல்டு பிரெஸ்டு எண்ணெய்கள், வெல்லம், தேன், மசாலா பொருட்கள் மற்றும் பருப்புகள் போன்றவைகள் உட்பட்ட அசலான ஆர்கானிக் உணவுப் பொருட்களையும் மற்றும் மர பொம்மைகள், மண் தயாரிப்புகள், கைகளால் உருவாக்கப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பல்வேறு தனித்துவமிக்க விஷயங்களை வழங்கும் “நல்ல சந்தை” – ஐயும் இங்கு அமைத்துள்ளனர். இவையனைத்தும், 80 – க்கும் மேற்பட்ட கடைகளில், கிராமங்களைச் சேர்ந்த 100 – க்கும் மேற்பட்ட விவசாயிகளால் நேரடியாக இங்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Comments
c44tagfg
78lmuugg

வில்லேஜ் டிக்கெட் 2.0 குடும்பத்துடன் கொண்டாட்டமாக இருக்கும் இடம் என்பதில் சந்தேகமேயில்லை.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT