NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

150 கிலோமீட்டர் விழிப்புணர்வு மாராத்தானில், பார்வை குறைபாடு கொண்ட மாணவி

“எனக்கு இன்ஸ்பிரேஷன் என்று யாரும் கிடையாது. ஏனெனில், நான் மற்றவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்

150 கிலோமீட்டர் விழிப்புணர்வு மாராத்தானில், பார்வை குறைபாடு கொண்ட மாணவி

சென்னை இராணி மேரி கல்லூரியில் இளங்கலை ஆங்கிலப் படிப்பு பயின்று வரும் திவ்யா என்ற பார்வை குறைபாடு கொண்ட மாணவி, 150 கிலோமீட்டர் விழிப்புணர்வு மாராத்தானில் கலந்து கொள்கிறார்

பிங்கத்தான் சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாரத்தான் நிகழ்ச்சி வரும் ஆகஸ்டு மாதம் 2 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. இந்த மாரத்தான் நிகழ்ச்சியில், புதுச்சேரியில் இருந்து சென்னை வரையிலான 150 கிலோமீட்டர் ஓட்டம் நடைப்பெற உள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாரத்தானில், ஊக்கம் அளிக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக திவ்யா கலந்து கொள்கிறார்.

விவசாய குடும்பத்தை சேர்ந்த திவ்யாவின் கனவு, வான் அளவு உயர்ந்து நிற்கிறது. பள்ளிப்பருவம் முதல் ஓட்டப்பந்தையத்தில் ஆர்வம் கொண்டுள்ள திவ்யா, போட்டிகளில் பங்கேற்று வெற்றிப் பெற்றுள்ளார். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன், தொடர்ந்து ஓட்டப்பந்தைய பயிற்சி மேற்கொள்ள முடியாதா என்று ஏங்கிய போது பிங்கத்தான் விழிப்புணர்வு மாரத்தானில் ஓடும் வாய்ப்பு திவ்யாவிற்கு கிடைத்துள்ளது.

ஒரு கண் பார்வை குறைபாட்டுடன் புத்தகங்கள் வாசிப்பது, ஓட்டப்பந்தையத்தில் ஓடுவது என தினசரி பழக்க வழக்கங்களை செய்வதற்கு கூட திவ்யாவிற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. எனினும், கடந்த ஒரு மாத காலமாக விழிப்புணர்வு மாரத்தானிற்கு பயிற்சி பெற்று வரும் திவ்யா, மனதளவில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.

qsah0o6

“எனக்கு இன்ஸ்பிரேஷன் என்று யாரும் கிடையாது. ஏனெனில், நான் மற்றவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆரம்ப காலக்கட்டத்தில் கடினமாக இருந்தாலும், தொடர் பயிற்சியினால் மாரத்தான் ஓட்டத்திற்கு தயாராகி வருகிறேன். குறைபாடுகளே என்னுடைய வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.” என்று நம்பிக்கையுடன் பேசினார் திவ்யா. மாரத்தானில் கலந்து கொள்வதற்காக தினமும் காலை 4 மணி முதல் சிறப்பு பயிற்சியை திவ்யா மேற்கொள்கிறார். உடல் ஆரோக்கியத்திற்கு புரதச்சத்து அதிகம் நிறைந்த ராகி கஞ்சி, பழங்கள், முட்டைகள், ப்ரொட்டீன் சப்ளிமெண்ட் ஆகியவை எடுத்து கொள்கிறார். திவ்யாவின் பயிற்சிக்கு தேவையான உதவிகளை அவரது கவனிப்பாளர் அனிதா செய்து வருகிறார்

Comments

பெண்களுக்கான உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலும், நோய்களை எதிர்த்து நல வாழ்வு வாழ்வதற்கான நம்பிக்கையினை வளர்க்கும் முயற்சியிலும் இந்த மாரத்தான் நடைப்பெற உள்ளது. மாரத்தானில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு ஊக்குவிப்பாளராகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திவ்யா அவர்களுடன் சேர்ந்து மாரத்தானில் கலந்து கொள்ள இருக்கிறார்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT