NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsPrimeArtWeddings
ADVERTISEMENT

எலுமிச்சையின் வியக்க வைக்கும் அழகு குறிப்புகள்

முகத்தில் உள்ள கருமை, முகப்பருக்களை போக்கி அழகான மற்றும் பொலிவான சருமத்தை பெறலாம்

எலுமிச்சையின் வியக்க வைக்கும் அழகு குறிப்புகள்

எலுமிச்சை இல்லாத வீடுகளே இருக்க முடியாது. இதனை பானமாகவோ, எலுமிச்சை கலந்த பொருட்களாகவோ, வெளி உபயோகமாகவோ அதனை தினசரி பயன்படுத்தி வரலாம். இந்த சிட்ரஸ் பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. மேலும் இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால், வயது முதிர்வை தாமதப்படுத்தி இளமையான தோற்றத்தை கொடுக்கும். மேலும் முகத்தில் உள்ள கருமை, முகப்பருக்களை போக்கி அழகான மற்றும் பொலிவான சருமத்தை பெறலாம்.

முகப்பருக்களை தடுக்க
முகத்தில் எண்ணெய் சுரப்பு அதிகம் இருப்பதே முகப்பரு வர காரணம். எலுமிச்சை முகத்தில் உள்ள அதிகபடியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. இதில் அமிலதன்மை மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி இருப்பதால், முகத்தில் உள்ள ப்ளாக் ஹெட்ஸ், தழும்பு, முகப்பரு, கருமை போன்றவற்றை நீக்கவல்லது. மேலும் முகத்திலுள்ள துளைகளை இறுக செய்து மென்மையான சருமத்தை கொடுக்கிறது. இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், மூன்று டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து, அதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

0q1u2lp

நிறத்தை அதிகரிக்க
எலுமிச்சையில் இருக்கக்கூடிய சிட்ரஸ் அமிலம் முகத்திற்கு நல்ல ப்ளீச்சாக செயல்படுகிறது. இருமுகத்தில் உள்ள கறுந்திட்டுக்கள், மறைய செய்கிறது. மூன்று மேஜைக்கரண்டி பப்பாளி விழுது, ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு மேஜைக்கரண்டி தேன் ஆகிய மூன்றையும் சேர்த்து, முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகம் பளிச்சிடும்.

Comments

கண்களின் வீக்கத்தை குறைக்க
கண்களை சுற்றி வீக்கம் இருந்தால், முகம் பொலிவிழந்து காணப்படும். கண்களின் வீக்கத்தை குறைப்பதற்கு எலுமிச்சை மிகவும் உதவியாக இருக்கும். ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறுடன் இரண்டு மேஜைக்கரண்டி தக்காளி சாறு சேர்த்து கண்களை சுற்றி தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர கண்களை சுற்றியுள்ள வீக்கம் குறையும். எப்பொழுதும் எலுமிச்சை சாற்றுடன் தண்ணீர் கலந்து தான் பயன்படுத்த வேண்டும். சென்சிட்டிவ் சருமம் இருப்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT